2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

முகக்கவசம் அணியாத 9 பேருக்கு வழக்கு

Niroshini   / 2021 மே 10 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட முள்ளியவளை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள முள்ளியவளை, தண்ணீரூற்று நீராவிப்பிட்டி ஆகிய பகுதிகளில், முகக்கவசம் அணியாத  9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முள்ளியவளை பொலிஸாரும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் இணைந்து மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின் போது, இரு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் முகக்கவசம் அணியாமல் சென்றுள்ளார்கள். இவர்களைப் பிடித்து பொலிஸாரிடம் பொது சுகாதார பரிசோதகர்கள் ஒப்படைத்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 9 பேரின் மீதான வழக்கு, வியாழக்கிழமை (13), முல்லைத்தீவு மாவட்டநீதவான் நீதிமன்றத்தில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக, முள்ளியளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X