Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2017 மே 24 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி - முகமாலைப் பகுதியில், வெடிபொருட்களை அகற்றுவதில் பாரிய சவால்களை எதிர்கொள்வதாக கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
யுத்தத்தின் பின்னர், இதுவரையில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்படாத பகுதியாகவும் அதிகளவு வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ள ஆபத்தான பகுதியாகவும், முகமாலை விளங்குகின்றது.
கிளிநொச்சியின் கிளாலி முதல் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி கிழக்கு, நாகர் கோவில் வரைக்குமான ஏறத்தாள ஏழு கிலோமீற்றர் நீளமான பகுதிகளில், அதிகளவான நிலக்கண்ணி வெடிகளும் ஆபத்தான வெடிபொருட்களும் புதைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றில், குறிப்பிட்ட சில பகுதிகளில் மாத்திரமே மீள்குடியேற்றத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான இடங்கள், ஆபத்தான பிரதேசங்களாகவே இன்னமும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில், கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள டாஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
“முகமாலை பகுதியில், அதிகளவான நிலக்கண்ணி வெடிகள், வாகனக் கண்ணிவெடிகள் என்பன மிகவும் ஆபத்தான நிலையில் புதைக்கப்பட்டுள்ளன.
வெடிக்காத நிலையில் காணப்படுகின்ற வெடிபொருட்களும் அதிகளவில் உள்ளன. அத்துடன், இராணுவ மண் அணைகள் மற்றும் கைவிடப்பட்ட காவலரண்களுக்கு அருகிலேயே, இந்த வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ளன.
இவற்றை அகற்றுவதில், பாரிய சவால்களை எதிர்நோக்கி வேண்டி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பகுதிகளுக்குள் பொதுமக்கள் பலர் நுழைந்து உயிரிழப்புக்கள் மற்றும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்” என, அவர் மேலும் குறிப்பிட்டார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago