Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 08 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் இரு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும் என பொது அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் முல்லைத்தீவு ஒதியமலைக் கிராமத்துக்கான பஸ் சேவைகள் நடைபெறாததன் காரணமாக, இக்கிராமத்தில் மீளக் குடியமர்ந்துள்ள குடும்பங்கள் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
இக்கிராமத்தில் வாழ்கின்ற மக்கள் ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் உள்ள நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்குச் செல்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
ஒதியமலை மக்கள் முல்லைத்தீவு தண்டுவானில் நடைபெறுகின்ற மாதாந்த மகப்பேற்று சிகிச்சைகளுக்கு சென்று வருவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஒதியமலைப் பாடசாலைக்கு ஆசிரியர்கள் சென்று வருவதில் சிரமங்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாவட்டச் செயலாளர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ஒதியமலைக் கிராமத்துக்கான பஸ் சேவையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதேவேளை, முல்லைத்தீவு - பெரியகுளம் பாடசாலையை மீள இயக்குமாறு கடந்த பத்தாண்டுகளாக இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையிலும் துணுக்காய் வலயக் கல்விப் பணிமனை குறித்த பாடசாலையைச் சொந்த இடத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவில்லை.
குறித்த பாடசாலை முத்தையன்கட்டுப் பகுதியில், தற்போது இயங்கி வரும் நிலையில் குறித்த பாடசாலையை பெரியகுளத்தில் மீள இயக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கும் படி பெரியகுளத்தில் வாழ்கின்ற பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறித்த கிராமத்தில் உள்ள மாணவர்கள் ஒலுமடு அ.த.க. பாடசாலைக்கும் நெடுங்கேணி மகா வித்தியாலயத்துக்கும் தற்போது சென்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago