எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 மார்ச் 06 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (05) மாலை சிலாவத்துறை மறிச்சிக்கட்டி செல்லும் பிரதான வீதிக்கு அருகாமையில் பிரதேச செயலாளர் மற்றும் சில ஊழியர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது குறித்த வீதியூடாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியுள்ளது.
இதன்போது பிரதேச செயலாளர், ஊழியர் ஒருவரும் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago