Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
மாந்தை கிழக்கின் அபிவிருத்திப்பணிக்காக ஒதுக்கப்பட்டு புதிய அரசாங்கம் வந்த காரணத்தினால் முடக்கப்பட்ட நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மாந்தை கிழக்கு தவிசாளர் ம.தயாநந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாந்தை கிழக்கில், பிரதேச சபை உருவானதன் பிற்பாடு, பல அமைச்சுகள் ஊடாக அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக நான்கு கோடி ரூபாயில் நான்கு எல்லை கிராமங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அனுமதி கிடைக்கப்பெற்றும் அதற்கான நிதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மாந்தை கிழக்கு பிரதேச மக்களின் வாழ்வாதாரத்துக்காக 1.37 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில், இந்த செயற்பாடும் முடக்கப்பட்டுள்ளன.
கலாசார மண்டபம் கட்டுவதற்கும் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளன. அதுவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பொதுவிளையாட்டு அரங்கு ஒன்று கட்டுவதற்கு 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளன. நான்கு வீதிகள் புனரமைப்புன்கு இரண்டு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன .
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மாஸ்தானும் இருக்கின்ற காரணத்தினால், மாந்தை கிழக்கு பிரதேசத்தின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் எந்தவித பாராபட்சமும் இன்றி மக்களின் அபிவிருத்தி பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உயரிய சபையில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் தொடர்பு கொண்டு இதற்கான அனுமதியினை மீண்டும் வழங்கவேண்டும் என்று மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் ம.தயாநந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025