Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு நடந்து செல்லும் மாணவர்களை பஸ்கள் ஏற்றிச் செல்வதற்குரிய வகையில் சேவையில் ஈடுபடுங்கள் என மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படாததன் காரணமாக பொது அமைப்புகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மீது விசனம் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முல்லைத்தீவு அம்பகாமம் கிராமத்திற்கான பஸ் சேவைகள் இடம் பெறாததன் காரணமாக மாங்குளம் மகா வித்தியாலயம் செல்கின்ற மாணவர்கள்; போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரினால் அம்பகாமம் கிராமத்திற்கு இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்ஸினை மாணவர்களின் போக்குவரத்து நேரத்தில் சேவையில் ஈடுபடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேபோன்று மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வன்னிவிளாங்குளம், அம்பாள்குளம் பகுதி மாணவர்கள் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாகவும் இதனைக் கருத்திற்கொண்டு பஸ் சேவையினை நடாத்தும்படி கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவினால் மாந்தை கிழக்கில் மாணவர்களின் போக்குவரத்துக்கு பஸ்; சேவைகளை நடத்துமாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் பஸ் சேவைகள் நடத்தப்படாததன் காரணமாக மாணவர்கள் தொடர்ந்து நடந்து செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது. மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படாததது தொடர்பாக பொது அமைப்புகள் விசனம் வெளியிட்டுள்ளன.
17 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
17 minute ago