2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

முதலமைச்சருக்கு ஆதரவாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

எஸ்.என். நிபோஜன்   / 2017 ஜூன் 16 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண முதலமைச்சர்  சிவி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், முதலமைச்சருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தும் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் பொது மக்கள் மற்றும் இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

'ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், "ஊழலுக்கு தண்டனை வழங்கு நீதியை ஆளவிடு, மக்களுக்கான ஆளுநரை சந்திக்க மறுத்தவர்கள் பதவிக்காக ஆளுநரின் காலில்ஊழலுக்குத் துணை நின்றால்தான் பதவியில் நீடிக்கலாமா?  தமிழரசுக் கட்சியே முதல்வரும் ஊழலுக்கு உடந்தையாக வேண்டுமா? முன்னுதாரணமான முதலமைச்சரின் செயலுக்கு தடையா?  நம்பிக்கையில்லா தீர்மானத்தை உடன் இரத்துச் செய் எங்கள் முதல்வர் எங்களுக்கு வேண்டும் பதவிக்காக ஆளுநரிடம் சரணடைந்ததா தமிழரசுக் கட்சி" போன்ற கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .