Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியா – கனகராயன்குளம், முதுரங்குளம் பகுதியிலுள்ள கைவிடப்பட்ட காணியொன்றில் இருந்து, இன்று (02) காலை, குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த காணியில் ஆடுகளுக்காகப் புல் வெட்டச் சென்ற ஒருவர், அங்கு குண்டுகள் இருப்பதை அவதானித்து, கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவலை வழங்கினார்.
இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த சுமார் 15 மோட்டார் குண்டுகளையும் ஒரு கைக்குண்டையும் மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட குண்டுகள், விசேட அதிரடிப் படையினர் உதவியுடன் செயலிழக்கப்பட்டன.
குண்டுகள் மீட்கப்பட்ட பகுதியில், வெற்று மதுபான போத்தல்கள் அதிகளவில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
20 May 2025
20 May 2025