Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று, இன்றைய மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மாவட்டங்களுக்கான புதிய ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கிணங்க, கிளிநொச்சி மாவட்ட ச் செயலாளரின் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று, இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது நொச்சி மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலின் போது நிர்வாக கட்டமைப்புடன் தொடர்புடைய விடயங்கள், சமூக அபிவிருத்தி சமூக நலன் சார்ந்த விடயங்கள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வாழ்வாதார அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago