க. அகரன் / 2018 ஏப்ரல் 06 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருட்களின் பாவனையை கண்டித்து, வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலய மாணவர்கள் இன்று (06) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் அண்மைக்காலமாக போதைப்பொருட்களின் பாவனை மற்றும் மதுகடைகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், பல தரப்பாலும் இதற்கு எதிராக குரல் எழுபப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலயத்தின் மாணவர்கள், பெற்றோர், சிவில் பாதுகாப்பு குழுவினர், பொலிஸார், சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு என்பன இணைந்து இன்று (06) பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, “போதையால் கல்வியை சீரழிக்காதே, போதையால் பொருளாதாரம் சிதைகின்றது, போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம், புகைத்தலை ஒழிப்போம் புற்றுநோயை தடுப்போம்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago