2025 மே 05, திங்கட்கிழமை

முறிகண்டி சிகிச்சை நிலையத்தின் சேவை ஆரம்பம்

Niroshini   / 2021 மே 16 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் அமைக்கப்பட்ட புதிய கொவிட் - 19 சிகிச்சை நிலையம், நேற்று  (15) திறந்துவைக்கப்பட்டது.

கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது, 300 படுக்கை வசதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

 

இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கொவிட் 19 சிகிச்சை நிலையமானது நேற்று  முதல் பணிகளை ஆரம்பிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த சிகிச்சை நிலையம், கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைவின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளது.

இதில்,  மாங்குளம் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X