2025 மே 23, வெள்ளிக்கிழமை

முல்லை நகருக்குள் பஸ்கள் வருவதில்லை

நடராசா கிருஸ்ணகுமார்   / 2019 ஜூன் 25 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூர் சேவையில் ஈடுபடுகின்ற பஸ்கள் நகரத்திற்குள் செல்வதில்லை என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு அருகில் தற்போது பஸ் நிலையம் இயங்கி வருகின்றது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரைச்சந்தித்த முல்லைத்தீவு நகர அபிவிருத்திக் குழு முல்லைத்தீவு பஸ் நிலையத்தில் இருந்து பயணத்தினைத் தொடங்கும். 

பஸ்கள் முல்லைத்தீவு நகரத்திற்குள் வந்து ஐந்து நிமிடங்களாவது தரித்துச் செல்வதற்கான வழியினை ஏற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தது. இதனடிப்படையில் மாவட்டச் செயலாளர் எடுத்த நடவடிக்கை காரணமாக முல்லைத்தீவு நகரிற்குள் பஸ்கள் தரித்துச் செல்கின்ற நிலைமை உருவானது. 

தற்போது உள்ளூர் பஸ்கள் பல பஸ்கள் நகரிற்குள் வருகை தராததன் காரணமாக பொது மக்கள் ஐந்நூறு மீற்றர் வரையான தூரம் நகரில் இருந்து பொருட்களுடன் நடந்து சென்று பஸ்களில் பயணிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக நகரில் உள்ள சந்தையில் கொள்வனவு செய்கின்ற உணவுப் பொருட்களுடன் பஸ் நிலையத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில் மாவட்டத்தின் அனைத்து உள்ளூர்
பஸ்களையும் நகரிற்குள் சென்று தரித்துச் செல்வதற்கான நடவடிக்கையினை மாவட்டச் செயலாளர் எடுக்க வேண்டும் என பொது மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X