2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

முல்லைக்கு அமரவீர விஜயம்

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சனிக்கிழமை (06) விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்கான உபகரணங்களையும் வழங்கி வைக்கவுள்ளார்.

இதேவேளை, நிலக்கடலைச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில், முத்துஐயன்கட்டுப் பிரதேசத்தில், 200 விவசாயிகளுக்கு, விவசாய உள்ளீடுகள் அமைச்சரால் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இதன்போது, புதிய நிலக்கடலை அறுவடை இயந்திரம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .