Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 25 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட ஆறு பிரதேச செயலகங்களில் ஒன்றான கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் வட்டுவாகல் பகுதியில், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 40 இலட்சம் ரூபாய் செலவில், அறநெறிக் கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச, மாவட்டத்தில் உள்ள ஏனைய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் அறநெறிக் கட்டடங்களை நிர்மாணித்துத் தருவதாக உறுதியத்துள்ளார்.
மாவட்டத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த மக்கள் பரவலாக வாழ்கின்ற சிலையில், அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் எதிர்காலத்தில் பயன்பெறத்தக்க வகையில் அறநெறிக் கட்டங்களை நிர்மாணித்துக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .