Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 75,381 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் கா.காந்தீபன் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் 15 வாக்களிப்பு நிலையங்களில் 5,372 பேரும் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் 20 வாக்களிப்பு நிலையங்களில் 7,458 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் 20 வாக்களிப்பு நிலையங்களில் 23,626 பேரும் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 49 வாக்களிப்பு நிலையங்களில் 24,237 பேரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 26 வாக்களிப்பு நிலையங்களில் 11,325 பேரும் மணலாறு பிரதேச செயலகப் பிரிவில் 5 வாக்களிப்பு நிலையங்களில் 3,363 பேரும் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளதாகவும், அவர் கூறினார்.
இதேவெளை, தபால் மூல வாக்களிப்புக்கான 2845 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்று ஏற்றுக்கொள்ளபட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஆரம்பகட்ட ஏற்பாடு குழுக்கள் அமைக்கப்பட்டு, தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
அத்துடன், தேர்தல் தொடர்பாக ஆளணிகள், வாகனங்கள் தொடர்பான கணக்கெடுப்புகள் இடம்பெறுவதாகவும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 11 பொலிஸார் தேர்தல் முறைப்பாட்டு பிரிவு முல்லைத்தீவில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளை முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் 021-3204351 எனும் தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது எனும் 021-2290030 எனும் தொலைநகல் இலக்கத்துக்கோ முறையிடலாமெனவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago