Niroshini / 2021 மே 26 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவில் நாயாறு தொடக்கம் கொக்குளாய் வரையான கடற்பரப்பில், நேற்று (25), சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 9 மீனவர்களை, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் கைதுசெய்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்கள், கொக்குளாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களை, நேற்று (25) மாலை, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, 9 பேரும், தலா இரண்டு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
3 hours ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
20 Feb 2026