2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2020 ஒக்டோபர் 01 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,  சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து,  கறுப்புக் கொடிகளுடன் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு - மாங்குளம் வீதியில்  அமைந்திருக்கின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க கட்டடத்துக்கு முன்பாக, இன்று காலை 10 மணி முதல் சுமார் ஒரு மணித்தியாலம் இந்த போராட்டம் இடம்பெற்றது. 

இந்தப் போராட்ட இடத்துக்கு அதிகளவான புலனாய்வாளர்கள் வருகைதந்து போரட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை புகைப்படம், மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்தியிருந்தனர்.

இதேவேளை, நேற்று, இந்தப் போராட்டத்துக்கான ஒழுங்குபடுத்தலை மேற்கொண்டிருக்கும்போது, இராணுவ புலனாய்வாளர்கள் இருவர் இரவு 08.45 மணியளவில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரியின் வீட்டுக்குச் சென்று, மிரட்டும் தொனியில் போராட்டம் தொடர்பில் தகவல்களைச் சேகரித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .