Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - சாலை தொடக்கம் நாயாறு வரையாக கடற்கரையோரப் பகுதிகளில், இன்று (12) 2ஆவது நாளாகவும் கடல் அலை சீற்றம் காணப்பட்டது.
கடல் அலையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், நேற்று (16) காலை, கடல் அலை சீற்றத்தால் கடல் நீர் கரையோர மக்களின் வாடிகளுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் புகுந்ததுடன், சில இடங்களில் கடல் நீர் தேங்கியுள்ளது.
முல்லைத்தீவு, மாத்தளன், புதுமாத்தளன், பொக்கணை, செல்வபுரம், கள்ளப்பாடு, சிலாவத்தை, தீர்த்தக்கரை, உப்புமாவெளி, அளம்பில் ஆகிய பகுதிகளிலேயே, கடல் நீர் உட்புகுந்துள்ளது.
இதனால், இந்த பகுதிகளில் உள்ள 10 வரையான மீனவர்களின் வாடிகள் கடல் அலைகளால் அடித்து வீழ்த்தப்பட்டுள்ளதுடன், சில படகுகள் சேதமடைந்துள்ளன.
மேலும், கரையோர வீதிகளைத் தாண்டி மக்களின் காணிகளுக்குள் கடல் நீர் சென்றுள்ளதால், கள்ளப்பாடு - தீர்த்தக்கரை - கரையோர வீதியால் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்த பகுதிகளைச் சேர்ந்த 500 வரையான கடற்றொழிலாளர்கள் கடந்த ஒரு வார காலமாக கடற்றொழிலுக்குச் செல்லாத நிலையில், அவர்கள் படகு இயந்திரங்களை வீதிகளில் கொண்டுவந்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பில் கிராம அலுவலகர் பதிவுகளை எடுத்தாலும், தங்களை அரச அதிகாரிகள் எவரும் வந்து பார்வையிடவில்லையென, மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago