Editorial / 2019 மே 07 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - செம்மலை கடற்பகுதியில், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்களின் படகு ஒன்றும் நான்கு மீனவர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
முல்லைத்தீவு - செம்மலை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், இலங்கைக் கடற்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்தவகையில், நேற்று (06) செம்மலை கடற்பரப்பில் படகு ஒன்றை சோதனை செய்துள்ளார்கள். இதன்போது குறித்த படகில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் வலைகள் மற்றும் உபகரணங்கள் காணப்பட்டுள்ளமையை தொடர்ந்து, படகில் இருந்த நால்வரையும் கைதுசெய்து, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் குறித்த நால்வரையும் இன்று (07) முல்லைத்தீவு மவாட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, அவர்களை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
26 minute ago
56 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
56 minute ago
2 hours ago
3 hours ago