2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

முல்லைத்தீவில் படையினர், பொலிஸார் குவிப்பு

Niroshini   / 2020 நவம்பர் 24 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், அதிகளவான மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுவதால், அவற்றை கண்காணிக்கும் நடவடிக்கையில் படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய, வன்னிவிளாங்குளம், ஆலங்குளம், ஜயன்கன்குளம் ஆகிய பகுதிளில் வீதித் தடைகள் போடப்பட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை விசுவமடு,  தேராவில், அளம்பில், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு நகர் பகுதிகளிலும் சுற்றுலா கடற்கரை வீதியிலும் வீதத் தடைகள் போடப்பட்டு, பொலிஸார் கண்காணிப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

அத்துடன், விசுவமடு, புதுக்குடியிருப்பு முள்ளிவாய்க்கால் ஆகிய வீதிகிளில் காலையும் மாலையும் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .