Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 ஜூன் 03 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன், சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள இந்தக் காலப்பகுதியில் பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி வளச்சுறண்டல்கள், ஒன்றுகூடல்கள் மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய வருகை என்பன இடம்பெறுவதாக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இவ்வாறு பயணக்காட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும,; அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், தற்போதுள்ள கொவிட் -19 அசாதாரண நிலைகாரணமாக நாட்டின் சகல பகுதிகளுக்கும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றார்.
'இந்நிலையில் இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வெளியே செல்லமுடியுமென நாட்டின் பாதுகாப்புத் தரப்புக்களும், சுகாதாரத் தரப்புக்களும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றார்கள்.
'இவ்வாறிருக்கும்போது இந்த பயணக்கட்டுப்பாட்டுக் காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில், வளச் சுரண்டல்கள் இடம்பெறுவதுடன், அதிகளவில் ஒன்றுகூடுவது மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகைதருவதென பல சம்பவங்கள் பதிவாகிவருகின்றன.
'குறிப்பாக முல்லைத்தீவு - தியோகுநகர் பகுதியில் இந்த பயணக்கட்டுப்பாட்டுக் காலங்களில் கடற்கரையோர மணல் திட்டுக்கள் மற்றும், காணிகளிலுள்ள மணல் தொடர்ச்சியாக அகழப்பட்டு வளச் சுரண்டல்கள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் அப்பகுதிமக்கள் என்னிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
'இவ்வாறு கடற்கரையோர மணல் திட்டுக்கள் அகழப்படுவதால் தமது குடியிருப்புப் பகுதிக்குள் கடல்நீர் உட்புகுந்துவிடுமோ என்ற அச்சம் அந்தமக்களுக்கு இருக்கின்றது.
'இது தொடர்பில் அந்த மக்கள், அப்பகுதிக்குரிய கிராம அலுவலரிடமும் தெரியப்படுத்தியுள்ளனர். அதற்கமைய அப்பகுதி கிராமஅலுவலர் இதுதொடர்பிலே ஆராய்ந்துள்ளார். இந்நிலையில் அங்கு மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் மணல் அகழ்விற்கென தம்மால் பெறப்பட்ட அனுமதிப்பத்திரத்தினை கிராம அலுவலரிடமும் அப்பகுதி மக்களிடமும் காண்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
'தற்போதுள்ள அசாதாரண நிலையில் அத்திய அவசிய தேவைகளுக்கே வெளியே மக்கள் செல்லலாம் என பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரப்புக்கள் கூறுகின்றன. இந் நிலையில் இந்த பயணக்கட்டுப்பாட்டுக் காலத்தில் இவ்வாறான வளச்சுரண்டல்கள் அத்திய அவசியமானதா?' எனவும், ரவிகரன் வினவினார்.
பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள இந்த காலத்தில் இவ்வாறான வளச்சுரண்டல்களுக்கான அனுமதிகளை வழங்கியது யார்? எனவும், அவர் வினவினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
36 minute ago
44 minute ago
1 hours ago