Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன், எஸ்.என்.நிபோஜன்
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று, முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமும் கவனயீர்ப்பப் பேரணியும் முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு ராஜப்பர் தேவாலயத்துக்கு முன்பாக காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று நிறைவடைந்தது.
இந்த போராட்டத்தில் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் பங்கெடுத்திருந்தனர்.
குறித்த உறவுகளின் போராட்டத்தில் மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவப்பிரகாசம் சிவமோகன் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் எம் கே சிவாஜிலிங்கம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
போராட்டம் மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் வருகைதந்து, மக்களிடம் ஐக்கிய நாடுகளுக்கான மகஜரை பெற்றுக்கொண்டு அதனை உரிய தரப்பினரிடம் அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.
23 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
49 minute ago
1 hours ago