2025 மே 05, திங்கட்கிழமை

முல்லைத்தீவில் மோதல்; நால்வருக்கு காயம்

Editorial   / 2021 மே 29 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
 
முல்லைத்தீவு- மாத்தளன் மற்றும் இரணைப்பாலை பகுதிகளை சேர்ந்த மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது நால்வர் காயமடைந்துள்ளனர். அந்த நால்வரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாலை சிறுகடலில் இறால் பிடித்து வரும் மீனவர்களுக்கு இடையிலேயே இந்த மோதல் இடம்பெறுள்ளதெனத் தெரிவித்த முல்லைத்தீவு பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றனர்.

சாலை சிறுகடலில் இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் இறால் கூடு கட்டி இறால் பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

இவர்கள் கட்டிய இறால் கூட்டில் இறால்கள் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் சாலை சிறுகடலுக்கு நேற்றிரவு சென்று அங்கு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மாத்தளன் பகுதி மீனவர்களை தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து   மாத்தளன் பகுதியைச் சேர்ந்தவர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

வாள்,கம்பி,கத்தி போன்றன கொண்டு இரணைப்பாலையைச் சேர்ந்த மீனவர்கள் மாத்தளன் பகுதி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இதன் போது இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் மூவரும் ம்,மாத்தளன் பகுதியனை சேர்ந்த மீனவரும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தாக்குதலின் போது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த பொலிஸார், கைது செய்யப்பட்டவர்,.  இரணைப்பாலையினை சேர்ந்தவர் என்றும்,  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X