2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கும் தாவரங்கள்

Niroshini   / 2021 நவம்பர் 09 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

சீரற்ற காலநிலை காரணமாக, வடக்கில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் முல்லைத்தீவு மாவட்டத்திலும்  தாழ்நிலப்  பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு கடல் கொந்தளிப்பாக காணப்படுவதோடு, கடற்கரையில்  தாவரங்கள் பல கரையொதுங்கி வருகின்றன.

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, கடல் கொந்தளிப்பாக காணப்படும் நிலையில், மீனவர்கள் எவரும் தொழிலுக்கு செல்லவில்லை.

இதேவேளை, கடல் கொந்தளிப்பாக காணப்படும் நிலையில், கடற்தாவரங்கள் பல கரையொதுங்கி வருகின்றன. முல்லைத்தீவு கடற்கரையில் பல கிலோமீற்றர் தூரத்துக்கு  இவை கரையொதுங்கியுள்ளன.

இதனால் மீனவர்களில் மீன்பிடி தொழிலுக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, நேற்று, யாழ்ப்பாணக் கடற்கரையிலும் இவ்வாறு கடற்தாவரங்கள் பல கரையொதுங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X