2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவு நகரத்தின் கழிவுகள் 15 நாள்களில் அகற்றப்படும்

Niroshini   / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு நகரக் கழிவுகள், இன்னும் இரு வாரங்களில், பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவென, முல்லைத்தீவு - கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நகரக் கழிவுகள் பாதுகாப்பற்ற முறையில் அகற்றப்படுவதன் காரணமாக, வாகனங்களில் இருந்து கழிவுகள் வீதிகளில் அடிக்கடி வீழ்வது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு நகரக் கழிவுகள், நெடுங்கேணி வீதியில் பிரதேச சபையால் கொட்டப்படுகின்றனவென்றார்.

 கழிவுகளைக் கொண்டு செல்லும் போது, வீதிகளில் கழிவுகள் வீழ்வது தொடர்பாக பொதுமக்களாலும் பிரதேச சபை அமர்வுகளில் உறுப்பினர்களாலும் அடிக்கடி தெரிவிக்கப்படுவதாகவும், அவர் சுறினார்.

 பிரதேச சபையில், கழிவு அகற்றுவதற்கான வாகனங்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்த அவர்,  மூன்று உழவு இயந்திரங்களுக்கு தற்போது பாதுகாப்பான கூடு அமைக்கப்பட்டு வருகின்றதெனவும் எனவே, வரும் 15 நாள்களில், இந்த மூன்று உழவு இயந்திரங்களும் கழிவு அகற்றலில் பாதுகாப்பான முறையில் ஈடுபடுமெனவும் கூறினார்.

ஏனைய மாவட்டங்களில், கழிவு அகற்றுவதற்கென பெரிய வாகனங்கள் உள்ளனவெனத் தெரிவித்த அவர்,  ஆனால், தாங்கள் வாகனப் பற்றாக்குறை காரணமாக உழவு இயந்திரங்கள் மூலமாகத்தான் கழிவுகளை அகற்றுகின்றோமெனவும், தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X