Niroshini / 2021 செப்டெம்பர் 05 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் சீனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விலை நிர்ணயத்தில், மக்களுக்கு சீனியை வழங்கும் நடவடிக்கையில், பலநோக்கு கூட்டுறவு சங்கம் ஈடுபட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு, முதற்கட்டமாக, 80 ஆயிரம் கிலோகிராம் சீனியை, கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக, பலநோக்கு கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மாவட்டத்தில் தனியார் வணிக நிலையங்கள் 200 ரூபாய் வரையில் சீனியை விற்பனை செய்து வருகின்றார்கள் என்றார்.
சீனிக்கான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அதனை நிவர்த்தி செய்து மக்களுக்கு தேவையான சீனியை கிராமங்களின் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக வழங்கும் நடவடிக்கையில் பலநோக்குக் கூட்டுறவு சங்கம் ஈடுபட்டுள்ளது எனவும், அவர் தெரிவித்தார்.
20 ஆயிரம் கிலோகிராம் சிவப்பு சீனியும் 60 ஆயிரம் கிலோகிராம் வெள்ளை சீனியும் முல்லைத்தீவு மாவட்டத்தை வந்தடைந்துள்ளன.
கொழும்பில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை தாபனத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட சீனிகளை கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 30 ஆயிரம் கிலோவும் புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 17 ஆயிரம் கிலோவும் ஒட்டுசுட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு 2 ஆயிரம் கிலோவும் துணுக்காய் பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 5 ஆயிரம் கிலோவும் விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 6 ஆயிரம் கிலோவும் மக்களுக்கு விநியோகிப்பதற்காக வழங்கப்படவுள்ளது' எனவும் கூறினார்.
இதேவேளை, பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் சீனிக்கான விலைப் பட்டியலும் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, வெள்ளை சீனி: சொரியாக - 122 ரூபாய், பொதி செய்தால் - 125 ரூபாய்
சிவப்பு சீனி: சொரியாக - 125 ரூபாய், பொதி செய்தால் - 128 ரூபாய்
29 minute ago
35 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
35 minute ago
44 minute ago