2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

’முல்லைத்தீவுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் வேண்டும்’

Niroshini   / 2021 ஜூன் 13 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு வலயத்துக்கு, வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு, வடமாகாணக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, கரைதுறைபற்று பிரதேச சபை உறுப்பினர் தவராசா அமலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்த வலயக் கல்விப் பணிப்பாளர் ஓய்வுபெற்று சென்று ஒரு மாதம் கடந்த நிலையிலும், இதுவரை புதிய கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை எனச் சாடினார்.

தற்போது, பயணக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், முல்லைத்தீவு வலயக் கல்வி பணிமனையால் முன்னெடுக்கப்பட  வேண்டிய பணிகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்த அவர்,  போரால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைக் கொண்டுள்ள ஒரு வலயத்தின் தேவைகளை நிறைவு செய்கின்ற பொறுப்பு வலயக் கல்வி பணிமனைக்கே உள்ளதெனவும் சுட்டிக்காட்டினார்.

ஆனால், நிரந்தர வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் இல்லாமல் அப்பணிகளை இலகுவில் நிறைவேற்ற முடியாதெனத் தெரிவித்த அவர், எனவே, முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குப் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு, வடமாகாணக் கல்வி அமைச்சு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .