Niroshini / 2021 ஜனவரி 28 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தேசிய பாடசாலை வளாகத்தில், வெடிபொருகள் இருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில், இன்று (28) அகழ்வுப் பிண முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 25ஆம் திகதியன்று, குறித்த பாடசாலையின் மைதானத்தை துப்புரவு செய்தபோது, வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, நிலத்தில் மேலும் மோட்டார் கைகுண்டுகள் புதையுண்டு காணப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைவாக, நேற்று (28) அவற்றை தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அப்பகுதியில் பொலிஸார், படையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், கனரக இயந்திரத்தைக் கொண்டு, அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, வெடிக்காத நிலையில் நூற்றுக்கணக்கான மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதனை செய்தி சேகரிப்பாதற்காக முள்ளியவளை பொலிஸ் நிலைய அதிகாரியின் அனுமதியைப் பெற சென்ற ஊடகவியலாளர்களுக்கு, படையினர் அனுமதி மறுத்ததுடன், படங்கள் எதுவும் வெளிவரக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025