2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

முள்ளிவாய்க்காலில் நிபந்தனையை மீறிய தொழில் நடவடிக்கை

Editorial   / 2019 ஜூன் 18 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன்

 

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் மேற்கொள்ளப்படும் நிபந்தனையை மீறிய தொழில் நடவடிக்கைகளால், தமது தொழில்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள, கடற்றொழிலை நம்பி வாழ்ந்துவரும் 4,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில், மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சி காரணமாக, நந்திக்கடலின் நீர்மட்டம் குறைவடைந்து, சிறு கடற்றொழிலாளர்களின் தொழில்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் அப்பிரதேச மீனவர்கள், ஆழ்கடலில் சுருக்குவலை பயன்படுத்துதல், வெளிச்சம் பாச்சுதல், நிபந்தனைகளை மீறிய வகையில் இரவுகிளல் கரைவலை இழுத்தல் போன்ற தொழில்கள் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இதனால், கடற்தொழில் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, மீனவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .