2025 மே 07, புதன்கிழமை

மூங்கிலாறு சிவன் கோவிலில் நித்திய பூஜைக்கு தடை

Niroshini   / 2021 ஜூன் 06 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட மூங்கிலாறு பகுதியில் உள்ள சிவன் கோவிலில், நித்திய பூஜை செய்வதற்கு, புதுக்குடியிருப்பு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவில்களில் மக்களை ஒன்றுகூட்டாது, கோவில் குருமார் நித்திய பூஜை செய்வதற்கு, அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், மூங்கிலாறு பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு, வியாழக்கிழமை (03) சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார், கோவிலில் இருந்த இரண்டு  குருக்களையும் கோவில் அறங்காவலரையும், பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அறிவுறுத்தி சென்றனர்.

இந்த அறிவுறுத்தலுக்கமைய, பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற குருக்களையும் அறங்காவலரையும், சுமார் 4 மணித்தியாலங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்த பொலிஸார், பின்னர். நித்திய பூஜை செய்யக்கூடாது எனவும், மிரட்டி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், இந்த விடயத்தை பிரதமர், ஜனாதிபதி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்று, இந்துகுருமார் ஒன்றியம் உடனடியாக நல்ல தீர்வினை பெற்றுத்தருமாறு, கோவில் பிரதம குரு கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X