2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’மேச்சல் தரவைகளை அமைப்பதில் இடர்பாடு’

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளை அமைப்பதில் இருக்கின்ற இடர்பாடுகள் காரணமாக  பண்ணையாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் அமைக்கப்படாமையால், பண்ணையாளர்கள், தங்களுடைய கால்நடைகளை பராமரிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிரநோக்கி வருகின்றார்கள், இந்நிலையில் கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் தொடர்பில் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தால் கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் அமைப்பதற்கு, 2015ஆம் ஆண்டில், 1100 ஏக்கர் மேச்சல் தரவை இனங்காணப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் கிழ் உள்ள மன்னாகண்டல், உடையார்கட்டு போன்ற இடங்களில் மேச்சல் தரவைகள் இனங்காணப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டபோதும், வனவளத்திணைக்கத்தால் அது பொருத்தப்பாடற்ற இடமாகக் காட்டப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது.

கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள குமுழமுனைப் பிரதேசத்தில் 500 ஏக்கர் நிலப்பகுதி அடையாளம் காணப்பட்டபோதும், இவற்றை அமைப்பதற்கான சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் அனுமதிகளை வழங்காமையினால், கால்நடைக்களுக்கான மேச்சல் தரவைகள் அமைக்க முடியாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .