2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மைதானத் துப்புரவுப் பணிக்கு வனவளத் திணைக்களம் தடை

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா – 4ஆம் கட்டை பகுதியில் உள்ள காணியை, நேற்று (12), அப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி துப்புரவு செய்ய முயற்பட்ட போது, அதற்கு வனவள திணைக்களம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதியில், சற்றுநேரம் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், 2002ஆம் ஆண்டு முதல், இப்பகுதியை விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

2007ஆம் ஆண்டளவில் இடம்பெற்ற இடம்பெர்வையடுத்து, அக்காணியில் சிறிய இராணுவ சாவடியொன்று ஒன்று அமைக்கப்பட்டது.

மீள்கு​டியேற்றத்தின் பின்னர், குறித்த பகுதியை அபகரிப்பதற்கு பலர் முயற்சி செய்தபோதும், அப்பகுதி மக்களின் தொடர் எதிர்ப்பு நடவடிக்கையால், அம்முயற்சி கைவிடப்பட்டிருந்தது.

தற்போது குறித்த காணி பற்றை வளர்ந்து காணப்படுகின்ற நிலையில், அக்காணியை மீண்டும் மைதானமாகப் பயன்படுத்துவதற்காக, அப்பகுதி இளைஞர்கள், நேற்று (12) ஒன்றுகூடி, காணியை துப்புரவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன்போது அப்பகுதிக்குச் சென்ற வனவளத் திணைக்கள அதிகாரிகள், இக்காணி, தமது திணைக்களத்துக்குரியதென்றுத் தெரிவித்து துப்புரவுப் பணிகளுக்குத் தடை விதித்தனர்.

 

இதனால், அப்பகுதி இளைஞர்களுக்கும் வனவளத் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டது.

இதையடுத்து, சம்வபத்தை அறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தர்மபால செனவிரத்ன,  இருதரப்புடனும் கலந்துரையாடினார்.

இதன்போது, குறித்த பகுதியை மைதானமாகப் பயன்படுத்துவதற்கான வேண்டுகோளை எழுத்துமூலமாக வழங்குமாறு தெரிவித்த தர்மபால செனவிரத்ன, அக்கோரிக்கையை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முன்வைத்து, அதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் ஒறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .