2025 மே 05, திங்கட்கிழமை

’மொத்த விற்பனை சந்தையில் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தவும்’

Niroshini   / 2021 மே 24 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மொத்தவியாபார சந்தையில், இராணுவத்தினரையோ அல்லது விசேட அதிரடிப்படையினரையோ கடமையில் ஈடுபடுத்துமாறு, சுகாதார பிரிவினரால் வவுனியா மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வவுனியா மொத்த வியாபார சந்தை சிறிய இடமாக இருப்பதுடன், அதிகமான சனநடமாட்டம் உள்ள பகுதியாக காணப்படுகின்றது. குறித்த பகுதியில்  பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டாலும் பொலிஸாரின் அறிவுரைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினரை அல்லது இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை வங்கியின் வவுனியா நகரக் கிளையில் அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் ஒன்றுகூடுகின்றனர். கடைவீதியில் வங்கி அமைந்திருப்பதனால் வியாபாரிகள் முதல் பொதுமக்கள் என பலர் அந்த வங்கிக்கு அதிகளவில் செல்கின்றனர்.

எனவே, இலங்கை வங்கிக்கு முன்பாக பொலிஸ் உத்தியோகதர் ஒருவரை நிரந்தரமாக நியமித்து, சுகாதார நடைமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X