Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் உள்ள விருந்தகமொன்றில், ஜூன் 5ஆம் திகதியன்று நடைபெற்ற திருமண நிகழ்வின் போது, அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒருதொகைப் பணத்தைக் கொள்ளையிட்ட நபரை, மேலும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் டி. சரவணராஜா, நேற்று (21) உத்தரவிட்டார்.
அத்துடன், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணைப் பிறப்பித்தும், நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக சபர், ஜூன் 28ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், ஓகஸ்ட் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில்ல வைக்கப்பட்டார்.
இந்த வழக்கு, நேற்று (21) கிளிநொச்சி மாவட்ட நீதவான் டி. சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, சந்தேகநபரின் அலைபேசி உரையாடல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, மேலும் இரண்டு பேரைக் கைது செய்ய வேண்டியுள்ளதாக, நீதவானின் கவனத்துக்கு பொலிஸார் கொண்டுவந்தனர்.
இதையடுத்து, முறைப்பாட்டாளர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள், சந்தேக நபருக்கு சார்பாகவே பொலிஸார் செயற்படுவதாகவும் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லையென்றும் தெரிவித்தனர்.
அத்துடன், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி, இத்தவணையில் ஆஜராகவில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, வழக்கை ஆராய்ந்த நீதவான், மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 May 2025
20 May 2025
20 May 2025