2025 மே 22, வியாழக்கிழமை

மோட்டார் சைக்கிளால் வவுனியாவில் பதட்டம்

Editorial   / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - குருமன்காட்டு பகுதியில் கடையொன்றின் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்களால் இன்று பதற்றமான நிலை உருவானது.

இன்று காலை 6.30 மணியளவில் பொலிஸாருக்கு குருமன்காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடை மூடப்பட்டுள்ளதால் சந்தேகம் தெரிவித்து தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, வவுனியா பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து மோட்டார் சைக்கிளை சோதனையிட்டதுடன் யாருடையது என அறிய விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது கிராம சேவகரும் குறித்த இடத்துக்கு பிரசன்னமாகியிருந்தார்.

இதன்போது அருகில் உள்ள கடையில் பூட்டப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி கமராவில் ஒருவர் மோட்டார் வைக்கிளினை நிறுத்திச்செல்வது பதிவாகியிருந்தது.

இதனையடுத்து விளம்பரப்பலகையில் காணப்பட்ட கடை உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட பொலிஸார் அவரை உடனடியாக வருமாறு தெரிவித்தனர்.

குறித்த இடத்துக்கு சிறிது நேரத்தின் பின்னர் வருகை தந்த கடை உரிமையாளர் மோட்டார் சைக்கிள் தனக்கு தெரிந்த ஒருவருடையது எனவும் உரிமையாளர் மன்னாரில் உள்ள கல்வித் திணைக்களத்தில் பணியாற்றுபவர் எனவும் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தனக்கு தொலைபேசியில் தெரிவித்து சென்றதாகவும் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் கடை உரிமையாளருக்கு எச்சரித்துடன் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X