Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2021 பெப்ரவரி 19 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் வைத்து, யானை தந்தங்களுடன் கடந்த 16ஆம் திகதி கைதான இருவரையும், தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கு, வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த இருவருரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தப்பியோடியுள்ள நிலையில், அவரைக் கைதுசெய்வதற்கு பிடியாணை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைவாக, ஒரு சோடி யானைத் தந்தங்களுடன் இருவர் கடந்த 16 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில், அவருக்கே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago