Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகமும், வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சும் அகில இலங்கை காந்தி சேவா சங்கமும் இணைந்து யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரியில் நேற்று (02) காந்தி ஜெயந்தி நிகழ்வை நடத்தின.
இதன்போது, காந்தியின் பெருமை சேர்க்கும் பேச்சு, பாடல், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் "காந்தீயம்" எனும் பத்திரிகை வௌியிடப்பட்டது.
அத்துடன் பாடசாலை சமூகத்தினால் யாழ் இந்திய துணை தூதுவர் எஸ். பாலச்சந்திரன் வடமாகாண கல்வி அமைச்சர் ஆகியோர் கொளரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் அகில இலங்கை காந்தி சேவா சங்க தலைவர் பேராசிரியர் ந. சிவகரன், பேராசிரியர் ரீ. கணேசலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .