Editorial / 2019 ஜூலை 05 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு - கேப்பாபுலவு பிரதேசத்தில், நேற்று (04) இரவு, வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், முல்லைத்தீவு பாதுகாப்புப் படை முகாம் அமைந்துள்ள இடத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தனியார்க் காணியொன்றிலேயே, இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக, இராணுவம் அறிவித்துள்ளது.
குறித்த காணியின் உரிமையாளரும் இன்னும் சிலரும் இணைந்து, விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக, அந்தக் காணியைச் சுத்தப்படுத்தியுள்ளனர்.
அங்கு சேகரிக்கப்பட்ட குப்பைகளை, ஓரிடத்தில் குவித்து, அவற்றை நேற்று மாலை எரித்துள்ளனர். இந்நிலையில், இரவு 8 மணியளவில், அவ்விடத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில், சில காலங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருந்த யுத்த தாங்கிகளை அழிக்கும் குண்டொன்றே வெடித்துள்ளதென, இராணுவம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில், இராணுவமும் முள்ளியவளை பொலிஸாரும் இணைந்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
29 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago