Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோய்ன் போதைப்பொருளுடன் மன்னார் கட்டையடம்பன் பகுதியில் வைத்து நபரொருவரை, நேற்றுப் புதன்கிழமை (24) மாலை 4.15க்கு கைதுசெய்துள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதயகுமாரசிங்கம் கௌசிகன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலையடுத்து, மன்னார் மாவட்ட பதில் பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸின் வழிகாட்டலின் கீழ், மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோவின் ஆலோசனைக்கு அமைவாக மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதயகுமாரசிங்கம் கௌசிகன் தலைமையில் சென்ற உப பொலிஸ் பரிசோதகர் ஜே.ரி.எஸ்.டி.ராஜபக்ஸ, பொலிஸ் சரயன்களான வடுகே (25350), றிபாச் (5627), பொலிஸ் கொஸ்தபிள்களான றொசான் (40735), ரத்னாயக்க (71580), பண்டார (44198), அஸங்க (80846), பொலிஸ் சாரதி வசந்த (80873) ஆகிய பொலிஸ் குழுவினரே குறித்த ஹெரோய்ன் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து ஆரம்பத்தில் 723 கிராம் எடை கொண்ட ஹெரோய்ன் பொதி மீட்டப்பட்டது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் போது குறித்த சந்தேகநபர் சிறுத்தோப்பில் அமைத்துள்ள மீன் வாடியில் பதுக்கி வைத்திருந்த மேலும் 272 கிராம் எடை கொண்ட ஹெரோய்ன் பொதி மீட்கப்பட்டது.
சுமார் 996 கிராம் எடை கொண்ட ஹெரோய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு, அதன் பெறுமதி ஒரு கோடி ரூபாய் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 3 கிலோ 329 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாப்பொதியும் மீட்கப்பட்டுள்ளது.
ஹெரோய்ன் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், மன்னார் பேசாலை கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும், மேலதிக விசாரணைகளைப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதயகுமாரசிங்கம் கௌசிகன் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago