Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Niroshini / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மன்னார் நோக்கி, கடந்த 20ஆம் திகதி இரவு பயணித்த தனியார் பஸ்ஸான ரத்னா ட்ரவல்ஸில் பயணித்த பயணிகள் அனைவரும் உடன் தொடர்புகொள்ளுமாறு, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று (27) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத் அவர், மினுவாங்கொடை கொரோனா கொத்தணி ஆரம்பித்த பின்னர், மன்னார் பட்டித்தோட்டம் பகுதியிலும், பேலியகொட மீன் தொகுதி கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய இருவர் கடந்த ஞாயிறு, திங்கட்கிழமைகளிலும் இனங்காணப்பட்டனர் என்றார்.
'இவ்விரு தினங்களிலும் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இருவர், கொழும்பில் இருந்து மன்னாருக்கு வந்த போக்குவரத்து விவரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
'இதனடிப்படையில், கடந்த 20ஆம் திகதி இரவு 11.20 மணியளவில் கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மன்னார் நோக்கி ரத்னா ட்ரவல்ஸ் என்ற தனியார் பஸ்ஸில் பயணித்த, மறுநாள் 21ஆம் திகதி காலை 8.45 மணியளவில் மன்னார் பஸ் நிலையத்தை வந்தடைந்தனர்.
'பின்னர், அங்கிருந்து தலைமன்னார் நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் இவ்விருவரும் பயணத்தை மேற்கொண்டனர்' என்றுவம் தெரிவித்தார்.
எனவே, கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மன்னார் நோக்கி தனியார் பஸ்ஸான ரத்னா ட்ரவல்ஸ் ஊடாக பயணித்த மக்கள் அனைவரும், 071-8474361 என்ற அலைபேசி இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி, தங்களது இருப்பிடத்தை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குத் தெரியப்படுத்துமாறும், வைத்தியர் வினோதன் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் செவ்வாய்க்கிழமை (27) வரையான காலப்பகுதி வரை, கொரோனா தொற்றாளர்கள் 11 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago