Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 பெப்ரவரி 24 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா - தாண்டிக்குளத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் சைக்கிளில் பாதையை கடக்க முற்பட்ட மாணவியை ரயில் பாதை திருத்தும் வாகனம் மோதியதில் மாணவி காயமடைந்து, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாண்டிக்குளம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள ரயில் கடவையில் தினமும் 5,000க்கும் மேற்பட்டவர்கள் கடந்து செல்லும் நிலையில் குறித்த கடவையில் சமிக்ஞை விளக்கு மாத்திரமே பொருத்தப்பட்டுள்ளது.
இச் சமிக்ஞை விளக்கும் சீராக செயற்படாத நிலையில், இன்று (24) காலை பாடசாலை மாணவியொருவர் ரயில் கடவையை கடக்க முற்பட்டபோது, ரயில் வீதியைத் திருத்தும் வாகனம் ரயில் வீதியில் வந்தமையால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் மாணவி காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த ரயில் நிலைய வாகனத்தை பொதுமக்கள் மறித்து வைத்திருந்த நிலையில் சில மணிநேரத்தின் பின் விடுவித்தனர். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .