Niroshini / 2021 மே 17 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன்
வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான து.ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை, ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம், முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான து.ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த வழக்கு மே 17ஆம் திகதி (இன்று) வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, முல்லைத்தீவு நீதிமன்றத்தால், குறித்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொளளப்படவில்லை.
இதையடுத்து, ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
49 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
5 hours ago