2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 02 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தில் நிலை கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை (1) காலை குறித்த நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.


மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டைச் சந்தியில் அமைக்கப்பட்ட 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தை கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக விசேட அதிரடிப்படையினர் (எஸ்.ரி.எப்) பாரிய முகாமாகப் பயன்படுத்தி வந்தனர்.

விசேட அதிரடிப்படையினரின் மாவட்ட தலைமை அலுவலகமாகவும் குறித்த பயிற்சி நிலையம் செயற்பட்டு வந்தது.

கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலையின் போது குறித்த 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தில் முதல் முதலாகக் கடற்படையினர் தமது முகாமை அமைத்திருந்தனர்.

குறித்த பயிற்சி நிலையத்தின் பின் பகுதியில் கடல் காணப்பட்டமை மற்றும் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி என்பதனையும் கருத்தில்கொண்டு கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் கடற்படையினர் பாரிய முகாமை அமைத்து, சோதனை நடவடிக்கைகளை ஈடுபட்டு வந்தனர்.

கடற்படையினர் குறித்த 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தில் இருந்து வெளியேறிய நிலையில் பல மாதங்களாகக் குறித்த பயிற்சி நிலையத்தை உரிய அதிகாரிகள் பெறுப்பேற்றுக்கொள்ளாத நிலையில் குறித்த நிலையத்தில் பல்வேறு துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் குறித்த பயிற்சி நிலையத்தைக் கைப்பற்றிய விசேட அதிரடிப்படையினர் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக தமது முகாமாக மாற்றி செயற்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தை உரிய திணைக்களத்திடம் மீள ஒப்படைக்க வேண்டும் எனத் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தின் நிலமை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்குக் கொண்டு சென்றதோடு உடனடியாக அங்கு நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றப்பட்டு உரிய திணைக்களத்திடம் கையளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .