2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வெதுப்பகம் மீதும் தாக்குதல்

George   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்  

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, வட மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (25) முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலின் போது, வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட கிளிநொச்சி நகரிலுள்ள வெதுப்பகம் (பேக்கரி) மீது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (25) இரவு ஏற்பட்ட குழப்ப நிலையையடுத்து, மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் தாக்குதலில், வெதுப்பகத்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.   

குறித்த வெதுப்பகம், செவ்வாய்க்கிழமை (25) காலையிலிருந்து வியாபார நடவடிக்கைக்காக திறந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .