2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வீதியை விரைந்து புனரமைக்குமாறு போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை

George   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பூநகரியின் முக்கொம்பனுக்கும் கிளிநொச்சியின் ஸ்கந்தபுரத்திற்குமிடையிலான நான்கு கிலோமீற்றர் வீதியினை நிரந்தர புனரமைப்புகள் தாமதமடையும் நிலையில் மழை காலத்தினைக் கருத்திற்கொண்டு தற்காலிக புனரமைப்பாவது மேற்கொள்ளுமாறு முக்கொம்பன், கண்ணகைபுரம், ஸ்கந்தபுரம் ஆகிய கிராமங்களின் மக்கள் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

'எமது கிராமத்தில் அரச பஸ்களின் சேவை நடைபெறுகின்ற போதிலும் முக்கொம்பனுக்கும் ஸ்கந்தபுரத்திற்குமிடையில் மழை காலத்தில் பஸ் சேவை நடைபெறாததன் காரணமாக முக்கொம்பன் கிராமத்திலிருந்து அக்கராயன் பிரதேச மருத்துவமனைக்கு நோயாளர்களும் அக்கராயன் மகா வித்தியாலயத்திற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் செல்லமுடியாதுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு குறித்த வீதியினை தற்காலிகப் புனரமைப்பு மேற்கொண்டு, போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தவேண்டும்' எனக் கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .