2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Niroshini   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு  மல்லிகைத்தீவு காட்டு அந்தோனியார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மல்லிகைத்தீவு காட்டு அந்தோனியார் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள்  அதிகவேகம் காரணமாக வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் புதுக்குடியிருப்பு 09ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஆ.யடிலன் மற்றும் புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அ.நிலக்சன் ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .