2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; மூவர் படுகாயம்

Thipaan   / 2016 மே 23 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் சந்தியில், இன்று மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்ததோடு, மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அடம்பன் பொலஸார் தெரிவித்தனர்.

வட்டக்கண்டல் கிராமத்தில் இருந்து ஆண்டாங்குளம் சந்தியூடாக,  வற்றாப்பலை ஆலயத் திருவிழாவுக்;குச் சென்ற ஹயஸ் வாகனத்துடன், அதிவேகமாகச் செலுத்திவரப்பட்ட மோட்டார் சைக்கிள் மோதியதிலே இவ்விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அதிலொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், இன்னொருவர், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஹயஸ் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில், ஒருவர் அடம்பன் வைத்தியசாலையிலும், மற்றவர், மன்னார் வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லையெனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X