Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2016 ஜூலை 01 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சியில் இருபதாயிரம் இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
மனிதவலு மற்றும் வேலைவாயப்பு திணைக்களத்தின் பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையம், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று(30), திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீரவினால் குறித்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது, திணைக்களத்தில் பணிபுரிவதற்கான நியமன கடிதமும், அலுவலக உபகரணங்களும் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது. இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்,
'கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தம் காரணமாக கல்வியை தொடர முடியாமல் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்து, அவர்களது குடும்ப வருமானத்துக்கு உதவ வேண்டும்' என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன், 'யுத்தம் காரணமாக கல்வியை தொடர முடியாத நிலையில் அவர்கள் சிறந்த வேலைவாய்ப்புக்களை பெற்று கொள்ள முடியாதுள்ளனர். இதன் காரணமாக குடும்ப வருமானம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
கிளிநொச்சியில் இரண்டு,மூன்று தொழிற்சாலைகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாயிரம் இளைஞர், யுவதிகள் வேலை செய்து வருகின்றார்கள். அவ்வாறு கிளிநொச்சிக்கு வர இருக்கும் தொழிற்சாலையில் எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்க ஆவண செய்து தரவேண்டும்' எனவும் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
25 minute ago
25 minute ago