2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வெளிக்கள நிலைய கூட்டம் குழப்பத்துடன் கூடியது

George   / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.திருச்செந்தூரன்

மூன்று தசாப்த காலமாக மந்தகதியில் செயற்பட்டு வந்த தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், வெளிக்கள நிலையத்தில் திங்கட்கிழமை (12) நடைபெற்றது.

பேராசிரியர் சிவசாந்தி குகநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் கலந்துகொண்டார்.

கடும் வாதப்பிரதிவாதங்கள் மத்தியில் கூட்டம் நடைபெற்றது. வெளிக்கள நிலையத்தின் கணக்கு விவரங்கள் பற்றி அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும், 30 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வெளிக்கள நிலைய கட்டடம் தொடர்பில் செலவுக்கணக்கு வேண்டும் எனவும் வினாவப்பட்டது.

பிரச்சினைகள் அதிகம் கதைக்கப்பட்டமையால், ஊடகவியலாளர்களை கூட்டத்தில் கலந்துக்கொள்ள அனுமதியளிக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .