2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விவசாய உபகரணங்கள் வழங்கிவைப்பு

Gavitha   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

மறைந்த முன்னாள் வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி  ஜெகநாதனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முல்லை மாவட்ட விவசாயிகளுக்கான ஒருதொகுதி உபகரணங்கள் நேற்று புதன் (19) முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தில் வைத்து வழங்கப்பட்டது.

மாவட்டப்பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,மறைந்த முன்னாள் வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனும் கலந்துகொண்டார் முல்லைத்தீவிலுள்ள கமக்கார அமைப்புக்களுக்கும் விவசாயிகளுக்கான தனிப்பட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டது.

மின்சாரத்தைப்பயன்படுத்தி நீர் இறைக்கும் இயந்திரங்கள் 10 நீர் இறைக்கும் இயந்திரம் 05 வலுதெழிகருவி 20 தெளிகருவி 5 என்பன பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது நிகழ்வில் மறைந்த முன்னாள் வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனின் மகன் பீற்றர் இளம்செழியனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .